அமலா பால் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (11:28 IST)
அமலா பால் நடிக்க இருக்கும் மலையாளப் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 
அமலா பால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் அமலா பால் ஜோடியாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் ஜோடியாக ‘ராட்சசன்’ என்ற படத்தில் நடித்துள்ளார் அமலா பால்.
 
இந்நிலையில், மலையாளப் படம் ஒன்றில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குநரான பிளஸ்ஸி இயக்கும் ‘ஆடு ஜீவிதம்’ என்ற  படத்தில்தான் அவர் நடிக்க இருக்கிறார்.
 
இந்தப் படத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் 25 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் இசையமைக்க இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்