என் கம்பெனி பேரை பயன்படுத்தனும்னா 2 கோடி கொடுங்க… முருகதாஸ் வைத்த செக்!

Webdunia
வியாழன், 20 மே 2021 (08:34 IST)
இயக்குனர் முருகதாஸின் ஏ ஆர் எம் பிக்சர்ஸ் தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில் சில ஆண்டுகளாக அவர்கள் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. இப்போது அவர் மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய படங்களை இயக்கியவரும் முருகதாஸின் உதவியாளர்களில் ஒருவருமான திருக்குமரன் இயக்கத்தில் ஒரு படத்தில் விஷால் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை தமிழில் புதிதாக கால்பதித்துள்ள சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அவர்களிடம் பிராண்ட் வேல்யு இல்லை என்பதால் முருகதாஸின் தயாரிப்பு நிறுவனம் வழங்கும் என போட்டுக்கொள்ளலாம் எனக் கேட்டுள்ளனர். அதற்கு சம்மதம் சொன்ன முருகதாஸ் அதற்காக 2 கோடி ரூபாய் கேட்டு அனைவரைக்கும் ஷாக் கொடுத்துள்ளாராம். இதனால் இப்போது விஷாலின் வி எஃப் எஃப் நிறுவனமே அந்த பொறுப்பை ஏற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்