’பீஸ்ட்’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்: அபர்ணாதாஸ் பகிர்ந்த வீடியோ

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (08:34 IST)
பீஸ்ட்’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்: அபர்ணாதாஸ் பகிர்ந்த வீடியோ
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பின்போது பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை நடிகை அபர்ணா தாஸ் வெளியீட்டு உள்ளதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 
 
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ’பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது 
 
இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த அபர்ணா தாஸ் ’பீஸ்ட்’  படப்பிடிப்பின்போது பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் 
அதில் விஜய்க்கும் நெல்சனுக்கு அவர் கேக் ஊட்டுவதும் அதேபோல் விஜய், அபர்ண தாஸ்க்கு கேக் ஊட்டும் காட்சிகளும் உள்ளன 
 
இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்த அபர்ணா தாஸ் இந்த நாளை என்னால் மறக்க முடியாது என்றும் தனக்கு மிகவும் ஸ்பெஷலான நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்