சூர்யாவை தொடர்ந்து அனுஷ்கா படத்தையும் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி இதோ...

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (15:32 IST)
அனுஷ்கா - மாதவன் நடித்துள்ள படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிவரும் “நிசப்தம்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அனுஷ்காவுடன் மாதவன் ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தில் டிரெய்லர் வெளியான நிலையில் கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. 
 
இந்நிலையில் தற்ப்போது இப்படத்தை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நேரடியாக வெளியாகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்