அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தில் விஷால் நடிக்கிறாரா? பரபரப்பு தகவல்..!

Mahendran
வியாழன், 2 மே 2024 (17:26 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பயோபிக் திரைப்படம் உருவாக இருப்பதாகவும் அதில் அண்ணாமலை கேரக்டரில் விஷால் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பயோபிக் திரைப்படங்கள் தமிழில் உருவாகி வருவது வழக்கமாகி வருகிறது என்பதும் சமீபத்தில் கூட இசைஞானி இளையராஜாவின் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது என்பதும் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அண்ணாமலை கேரக்டரில் நடிகர் விஷால் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்