மலையாள சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அனிருத்!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (08:06 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் மாறியுள்ளார் அனிருத். அவர் இசையமைக்கும் படங்களில் பாடல்கள் அதிரி புதிரி ஹிட்டாகிவருகின்றன. இப்போது விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினியின் ஜெயிலர் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது முதல் முறையாக மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கி நடிக்கும் டைசன் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். டைசன் படத்தை கே ஜி எஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் காயமடைந்த பிருத்விராஜுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளார். அவர் குணமானதும் டைசன் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்