சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் வாழ்த்துகள் கூறிய அனிருத் மற்றும் அட்லி

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (20:05 IST)
சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்  பிறந்த நாளுக்கு அனிருத் மற்றும் அட்லி வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

 
இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று தன் 57 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இவருக்கு சினிமாத்துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

 இவர், கடந்த சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படம் ரிலீஸாகாத நிலையிலும், அவரது மகன் ஆர்யன் கான் கைதான விவகாரத்திலும் பெரிதும் வருத்தத்தில் இருந்த ஷாருக்கான் அதிலிருந்து மீண்டு, பதான், அட்லியின் ஜவான் படங்களில் நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக உருவாகி வரும் பதான் படம் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி, ரிலீசாகவுள்ளதாகவும்

இப்படத்தின்  டீசர்  ஷாருக்கான் பிறந்த நாளையொட்டி இன்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டீசரை படக்குழு இன்று ரிலீஸ் செய்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த டீசரில் மிகவும் ஸ்டைலிஷாக உள்ள ஷாருக்கான், ஜான் ஆபிரகாமின் தோற்றமும் ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில், ஜவான் பட இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் அட்லி இருவரும் ஜவான் பட ஹீரோவான ஷாருக்கானுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இன்று ஷாருக்கானுக்கு பிறந்த  நாள் வாழ்த்துகள் தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவர் வீட்டின் முன் குவிந்தனர்.அப்போது அவர் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்