இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் துபாய்க்கு சென்ற நடிகர் விஜய், இன்று சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், துபாயில் நடிகர் விஜயுடன் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டோரும் பயணம் செய்துள்ளதாகத் தெரிகிறது.
இப்பயணத்தின்போது, விஜய், லோகேஷ்கனகராஜ், அனிருத் ஆகியோரை புகைப்படம் எடுத்துள்ளார். இப்புகைப்படம் இணையதளடிஹ்தில் வைரலாகி வருகிறது. VIJAY67 படத்திற்கான டிஸ்கஷனுக்கான அனைவரும் அங்கு சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.