பாபா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அனிருத் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:16 IST)
ரஜினிகாந்த் நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படத்தில் அனிருத் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கு பாபா மிக முக்கியமான திரைப்படம். அவரது அரசியல் வருகை பற்றி பேச்சுகள் மிக அதிகளவில் பேசப்பட்டு வந்த காலகட்டத்தில் வந்த படம் படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமில்லாமல் பல சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்நிலையில் அந்த படத்தில் இன்றைய மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளரும், ரஜினிகாந்தின் உதவியாளருமான அனிருத் ஒரு நடிகராக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பாபா படத்தில் இடம்பெற்றுள்ள டிப்புகும்மாரே என்ற பாடலில் பல சிறுவர்கள் ரஜினியுடன் ஆடுவார்கள். அதில் அனிருத்தும் ஒரு சிறுவனாக நடித்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிருத் இப்போது இரண்டு ரஜினி படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்