ஆண்டிகள் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் சிவகுமார்

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (14:21 IST)
பக்கம் பார்த்து பேச வேண்டும் என்பார்கள். இப்போது சாதிப் பெயர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும் போலிருக்கிறது.

 
ஜோக்கர் படவிழாவில் பேசிய நடிகர் சிவகுமார், ராஜு முருகனையும், குரு சோமசுந்தரத்தையும் ஆண்டிகள் போல வாழ்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. அதெப்படி அவர் ஆண்டிகள்னு சொல்லலாம் என்று ஆண்டி பண்டாரம் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதற்கு அறிக்கை மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார் சிவகுமார்.
 
"இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு ஊர் ஊராக அலைந்து, பந்த பாசம் துறந்து வாழ்ந்தவர்கள் டைரக்டர் ராஜுமுருகனும், ஹீரோ குரு சோமசுந்தரமும். அகோரிகள், பாலைவனத்தில் வசிப்பவர்கள் என பலரோடு தங்கி அனுபவம் பெற்றவர்கள் என்பதைச் சொல்லும்போது ஆண்டிகளாக வாழ்ந்த இரண்டு பேர் சேர்ந்து ஜோக்கர் படம் எடுத்திருக்கிறார்கள் என்று பேசியிருந்தேன். 
 
இறைவன் படைப்பிலே அனைவரும் சமம் என்று நினைப்பவன் நான்.. நான் அறியாமல் பேசியது ஆண்டிப்பண்டாரம் என்று ஒரு பிரிவு மக்களை நோகச் செய்திருக்கிறது என்று தெரிவிப்பதால், அவர்கள் மனதைப் புண்பட வைத்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்."
 
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்