அந்தகன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட சிம்ரன்!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (09:56 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படத்தை கலைப்புலி தாணு தன்னுடைய வி கிரியேஷன்ஸ் மூலமாக வெளியிடுகிறார். இந்த படம் சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும்.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த் இந்த படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில் ரிலிஸூக்கு காத்திருக்கிறது. படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள சிம்ரன் அந்தகன் படத்தின் ஷூட்டின் நிறைவடைந்துவிட்டதாகவும், விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்