துணிவு இயக்குனர் வினோத்தை அழைத்துப் பாராட்டிய ஆனந்த் சீனிவாசன்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (16:20 IST)
சமூகவலைதளங்களில் பொருளாதாரம் குறித்து தொடர்ந்து பேசி இளைஞர்களை பெரியளவில் கவர்ந்துள்ளார் ஆனந்த் சினீவாசன்.

தன்னுடைய மணிப்பேச்சு என்ற சானல் மூலம் தினமும், பொருளாதாரம் பங்குச்சந்தை ஆகிய விஷயங்களை பொதுமக்களுக்கு புரியும் விதமாக பேசி பிரபலம் ஆனவர் ஆனந்த் சீனிவாசன். அவரின் அறிவுரைகளில் பல இளைஞர்கள் அவரை பாலோ செய்யும் நிலையில், அவரின் கருத்துகளை வைத்து மீம்ஸ்களும் அதிகளவில் பரவி வருகின்றன.

இந்நிலையில் துணிவு படத்தில் வங்கி ஊழல்கள், இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் பண்ட்ஸ் மோசடிகள் உள்ளவற்றை பேசி ரசிகர்களைக் கவர்ந்துள்ள இயக்குனர் வினோத்தை தன்னுடைய சேனலுக்கு அழைத்து பாராட்டி சிறப்பித்துள்ளார். மேலும் அவரோடு 40 நிமிடம் அளவுக்கு உரையாடி அந்த வீடியோவையும் வெளியிட அது வைரல் ஆகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்