என்னது… எமி ஜாக்சனும் ரோபோவா?

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (13:41 IST)
ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ படத்தில், எமி ஜாக்சனும் ரோபோவாக நடித்திருக்கிறார் என்கிறார்கள்.



‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது ‘2.0’. இந்தப் படத்தை ஷங்கர் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

‘எந்திரன்’ படத்தில், ஒரு ரஜினி விஞ்ஞானியாகவும், அவர் உருவாக்கிய ரோபோவாக இன்னொரு ரஜினியும் நடித்திருப்பர். மனிதனின் உணர்ச்சிகளைப் பெற்ற ரோபோ ரஜினி, ஹீரோயினான ஐஸ்வர்யா ராயைக் காதலிப்பதுதான் படத்தின் சுவாரஸ்யம். ஆனால், நேற்று லீக்கான ‘2.0’ புகைப்படத்தைப் பார்க்கும்போது, எமி ஜாக்சனும் ரோபோவாக நடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்படியானால், ரோபோவுக்கும் ரோபோவுக்கும் இடையிலான காதல் தான் படத்தின் கதையா?
அடுத்த கட்டுரையில்