சூர்யா – விக்னேஷ் சிவன் ட்ரிக் ஒர்க் அவுட் ஆகுமா?

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (13:10 IST)
தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்காக வைத்துள்ள ட்ரிக் ஒர்க் அவுட் ஆகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவகுமார், சத்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம், ஹிந்தியில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தழுவலாக உருவாகி வருகிறது என்கிறார்கள்.

ஆனால், அந்தப் படத்தின் ரீமேக் உரிமை, இயக்குநர் தியாகராஜனிடம் இருக்கிறதாம். அதனால், அந்தப் படம்தான் இந்தப் படம் என்று தெரியாமல் இருக்க, ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார்களாம். ஹிந்திப் படத்தில் பாடல்களே கிடையாது. ஆனால், இந்தப் படத்தில் 8 பாடல்களை வைத்து, ‘எங்க படத்துக்கும், அந்த படத்துக்கும் ஆறு ஒற்றுமை சொல்லுங்க’னு கேட்கப் போறாங்களாம். முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்க முடியுமா?
அடுத்த கட்டுரையில்