உடல் எடை குறைச்சுட்டாங்களா... அடேய் ஏமி ஜாக்சன் எப்போடா குண்டா இருந்தாங்க...?

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (11:41 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.

அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.

பின்னர் கடந்த மே மாதம் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வரும் எமி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கியூட்டான சில புகைப்படங்ககளை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் டைட்டான Skinny ஜிம்  உடை அணிந்து அடர்ந்த காட்டுக்குள் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படத்தில் ஏமி ஜாக்சனை பார்த்தால் ஒரு குழந்தை பெத்து ஒரு வருடம் ஆகிறது என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. ஆனால், ரசிகர்கள், ஏமி மிகவும் ஸ்லிம் ஆகிவிட்டதாக ஆச்சர்யத்தில் கமெண்ட் செய்துள்ளனர். ஏமி எப்போப்பா குண்டா இருந்தாங்க...? அவங்க எப்பவுமே பிட்னஸ் குயின் தான்...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்