என் படத்தை வெளியிட விடாமல் தடுத்தார்கள்: அமலா பால் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (19:08 IST)
என்னுடைய திரைப்படத்தை வெளியிட விடாமல் சில தடுத்தார்கள் என நடிகை அமலாபால் கூறியுள்ளார்
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் நடித்த காடவர் என்ற திரைப்படம் வரும் 12ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில்  வெளியாக உள்ளது. இந்த படத்தை இவரே தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தபோது இந்தப் படத்தை வெளியிட நான் முயற்சி செய்தபோது பலர் கடுமையாக உழைத்து தடுத்தார்கள் என்றும் ஆனால் கடவுள் அருளால் தற்போது 12ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்த படத்தில் அவர் தடவியல் நிபுணராக நடித்துள்ளதாகவும் இந்த படம் மக்களுக்கும் பிடிக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்