பிரேமம் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் இவர்தான்… அல்போன்ஸ் புத்திரன் பகிர்ந்த தகவல்!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (18:21 IST)
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் இளைஞர்களின் ஆல்டைம் பேவரைட் படங்களில் ஒன்றாக அமைந்தது.

’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார் இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு  5 ஆண்டுகளாக அவர் அடுத்த படத்தை பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பஹத் பாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். மேலும் அந்த படத்துக்கு தானே இசையமைப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் இந்த படத்தில் இப்போது நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் அவர் மேற்கொண்ட உரையாடலில் பிரேமம் படத்தைப் பற்றிய ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குக் காரணமாக அமைந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் சாய்பல்லவியை நடிக்க வைப்பது அவரின் முதல் தேர்வு இல்லையாம். நடிகை அசினைதான் நடிக்க வைக்க முடிவு செய்தார்களாம். இதற்காக அவரை தொடர்புகொள்ள முயன்ற போது அது நடக்கவில்லையாம். அதனால் கதாபாத்திரத்தை மாற்றி சாய்பல்லவியை நடிக்க வைத்ததாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்