புராணங்களில் தேவர்கள் மற்றும் அசுரர்கள் இறவா நிலை தரும் அமிர்தத்தை பெற பாற்கடலை கடைந்தபோது இறுதியாக மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டவரான தன்வந்திரி பகவான் மனிதர்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைவருக்கும் இறவா நிலையை தரும் அமிர்த கலசம் மற்றும் நோய்களை போக்கும் பல மருத்துவ மூலிகைகளுடன் தோன்றினார்.
தன்வந்திரி விரதம் மேற்கொள்வதற்கு சிறந்த தினமாக கருதப்படுவது ஐப்பசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை திரியாதசி தினமாகும். இந்த விரத நாளன்று வறியவர்களுக்கு வஸ்திர தானம் செய்தாலும் யமனை குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டக துதி படிப்பதாலும் கொடுமையான நோய்கள் நம்மை பீடிக்காமல் மரணங்கள், துர்மரணங்களில் இருந்து மீண்டு, தீர்க்கமான ஆயுளை பெற தன்வந்த்ரி பகவானும், எம தர்மரும் ஆசிர்வதிப்பதாக ஐதீகம்.