கமலுக்கு பேரனாக நடித்துள்ள அல்லு அர்ஜுன்… இணையத்தில் வைரல் ஆன புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (10:01 IST)
கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு இணையாக தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்து பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.  தெலுங்கில் அவர் இணைந்து பணியாற்றிய முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கே விஸ்வநாத். கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களான சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து மற்றும் பாச வலை ஆகிய படங்களை இயக்கியவர் கே விஸ்வநாத். இவர் இயக்கிய சங்கராபரணம் உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படங்களாக அமைந்தன.

இதில் ஸ்வாதி முக்த்யம் என்ற படம் இன்றளவும் கிளாசிக் படமாக பேசப்பட்டு வருகிறது. அந்த படத்தில் கமலுக்கு பேரனாக அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அது சம்மந்தமான ஸ்க்ரீன்ஷாட் இப்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்