விடாமுயற்சி படத்தோடு மோதும் கேம்சேஞ்சர்… தியேட்டர்கள் பிரிப்பதில் சிக்கல் எழுமா?

vinoth
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (10:40 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அனிருத் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் கேம்சேஞ்சர் படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகிறது. இதனால் விடாமுயற்சி படத்துக்கு வெளிநாடுகளில் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்