வெளிநாட்டில் அஜித்… இணையத்தில் பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்!

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (08:09 IST)
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில் இப்போது அஜித்தும் இயக்குனர் மகிழ் திருமேனியும் லுக் டெஸ்ட்டுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போது அஜித் வெளிநாட்டு உணவகம் ஒன்றில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

லைகா நிறுவனத்தில் நடந்த ரெய்ட்டால் அந்த நிறுவனத்துக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டதுதான் என சொல்லப்படுகிறது. இதனால் லைகா நிறுவனமே விடா முயற்சி படத்தை தொடங்குமா அல்லது வேறு நிறுவனத்துக்குக் கைமாறுமா என்றெல்லாம் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்