அஜித் அரசியலில் ஒன்னும் பண்ணமுடியாது, விஜய் தான் மாஸ் - பிரபல தயாரிப்பாளர்

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (11:34 IST)
அஜித் அரசியலுக்கு வந்தாலும் அவரால் முதலமைச்சர் ஆகமுடியாது.  விஜய்க்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 
விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு விஜய்யை பற்றி புகழ்ந்து பேசி ரசிகர்களை மகிழ்ச்சி அடையவைத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார். 
 
இதைப்பற்றி ஒரு பேட்டியில் பேசிய பிரபல தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார், "விஜய் அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு படம் நடிக்கட்டும். நீங்கள் எவ்வளவு அவரை டார்ச்சர் செய்கிறீர்களோ அவ்வளவு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார்" என அவர் கூறியுள்ளார்.
 
அதே நேரத்தில் ஜோதிடத்தில் அதிக ஆர்வம் கொண்ட தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் விஜய் இன்னும் 7 வருடங்களில் அரசியலுக்கு வந்துவிடுவார் என கணித்துள்ளதாக கூறியுள்ளார்.
 
மேலும் அஜித்தும் அரசியலுக்கு வருவார் என கூறிய அவர், முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு விஜய்க்கு மட்டும் தான் இருக்கிறது என கட்டம் சொல்வதாக பி.டி. செல்வகுமார் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த இன்பச்செய்தியால் விஜய் ரசிகர்கள் குஷி ஆகியிருந்தாலும்,  அஜித் ரசிகர்களை சற்று கடுப்பேற்றியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்