'எஸ்கே 16' படத்தில் இணைந்த அடுத்த நாயகி!

Webdunia
திங்கள், 6 மே 2019 (20:16 IST)
இன்று மாலையில் இருந்தே சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 16வது படத்தின் அப்டேட்டுக்களை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் செய்து கொண்டே இருப்பதால் டுவிட்டரில் இந்த படத்தின் ஹேஷ்டேக்குகள் தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றன.
 
முதலில் இந்த படத்தில் இசையமைப்பாளர் டி.இமான் இணைவதாகவும், அதன்பின்னர் 'துப்பறிவாளன்' நாயகி அனு இமானுவேல் இணைவதாகவும் சன்பிக்சர்ஸ் அறிவித்தது. அதன்பின்னர் சற்றுமுன் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இரண்டு நாயகிகள் என்பது இந்த படத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே ரீதியில் சென்றால் இந்த படத்தின் இன்னும் சில அப்டேட்டுக்கள் வெளிவரும் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்