SK-16ல் சிவகார்த்திகேயனின் ஜோடி இவங்க தான்! லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

திங்கள், 6 மே 2019 (19:15 IST)
எஸ்.கே.16 படத்தின் கதாநாயகி குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை சன் பிச்சர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 


 
கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். மெரினா படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களது கூட்டணியில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில், இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
 
சிவகார்த்திகேயனின் 16வது படம் உருவாகவுள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு  டி. இமான் இசை அமைக்கவுள்ளதாக  சற்றுமுன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர் அறிவித்தனர்.  
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்னவென்றால், SK- 16 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக "அனு இம்மானுவேல்" நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 


 
இவர் ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் 2017ல் வெளிவந்த "துப்பறிவாளன்" படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்