ஐஸ்வர்யா ராஜேஷை கஷ்டப்படுத்திய இயக்குநர்

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (12:30 IST)
இயக்குநர் கெளதம் மேனனுடன் பணியாற்றியபோது தான் கஷ்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 
 
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. ரிது வர்மா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கெளதம் மேனன் ஸ்டைலிஷான இயக்குநர் என்பதால்,  ஆரம்பத்தில் அவருடைய டயலாக் டெலிவரியைப் புரிந்துகொள்ள கஷ்டப்பட்டாராம் ஐஸ்வர்யா. ஆனால், போகப்போக  பழகிவிட்டதாம். 
 
கெளதம் மேனன் படங்களில் ஹீரோயின்கள் எப்போதுமே அழகாகத் தெரிவார்கள். எனவே, தானும் இந்தப் படத்தில் அதிக  அழகுடன் தெரிவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்கு அப்படியே நேர்மாறான கேரக்டராம்  ‘வடசென்னை’ படத்தில். லோக்கல் பாஷை பேசும் வடசென்னைப் பெண்ணாக நடிக்கிறாராம்.
அடுத்த கட்டுரையில்