எனக்கு வலது கண் தெரியாது ; அதிர வைத்த நடிகர் ராணா டகுபதி - வீடியோ!

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (12:03 IST)
நடிகர் ராணா தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்திருந்தாலும், ராஜமௌலி இயக்கிய ’பாகுபலி’ திரைப்படத்தின் மூலமாகவே அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறினார்.


 
 
பாகுபலி 2 படத்தில் பல்வாள்தேவனாக அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய ராணா தனது வலது கண் வேறொருவருடையது, இதனால் சிறுவயதில் தனது வலது கண் தெரியாது என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட ராணா இரண்டு சிறுவர்களுக்கு அளித்த ஆலோசனையில் இதனை தெரிவித்திருந்தார்.
 
தனக்கு வலது கண் தெரியாது என்றும் தற்போதுள்ள கண் வேறொருவர் இறப்ப‌தற்கு முன் தனக்கு தானம் செய்தது என ராணா  தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு கண் தானம் பெற்று எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும் எனக்கு வலது  கண்ணில் நிறங்கள் மட்டுமே தெரியும் பார்க்க முடியாது என கூறியுள்ளார்.
 
தொடர்ந்து கூகையில் சிறுவர்களே நீங்கள் இருவரும் நல்ல சிறுவர்களாக தெரிகிறீர்கள். நீங்கள் இருவரும் உங்களது வயதான தாத்தா, பாட்டி, பெற்றோரை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்'' என்று உருக்கமாக தெரிவித்தார். கவலைகள் ஒரு நாள்  போய்விடும். நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கூறும் ராணாவின் அந்த வீடியோ தற்போது சமூக  வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
அடுத்த கட்டுரையில்