சினிமாவிற்கு வந்த பிறகு என் சுதந்திரம் போய்விட்டது: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேச்சு

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (15:03 IST)
தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்களை பாடி வருபவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்   கொடுத்துள்ளார். தன் 72 வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் மிகவும் மன உருக்கத்துடன் பேசியுள்ளார்.

 
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர், கோணேட்டம் பேட்டை கிராமத்தில் தான் பிறந்த  வீட்டிற்கு சென்று, பின் அங்குள்ள அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
 
என் தாய்மொழி இசை தான். கிராமத்து மக்கள் என் மீது வைத்துள்ள அன்பை என்னால் மறக்க முடியாது. சினிமாவிற்கு வந்த  பிறகு என் சுதந்திரம் போய்விட்டது. பிரபலமாக இருப்பதால் தெருவில் கூட நடந்த செல்ல முடியவில்லை. இதனால் பொது  நிகழ்ச்சிகளை கூட தவிர்த்து விடுகிறேன். என் கிராமத்து மக்கள் என்னை மணியாக பார்த்தால் எனக்கு சந்தோசம். இங்குள்ள கோவில் குளம் தூர்வார நிச்சயம் உதவி செய்வேன் என எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்