கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை குறைந்தது 4 அல்லது 5 திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இரண்டு திரைப்படங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
ஒன்று சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் உருவான 'அடுத்த சாட்டை' என்ற திரைப்படம். இந்த திரைப்படம் ஆசிரியர்கள் குறித்த பெருமைகளைக் கூறும் கதையம்சம் கொண்ட படம் என்பதால் சரியாக செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற லிப்ரா நிறுவனம் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படத்தை வெளியிட முடிவு செய்து, அதற்கான அறிவிப்பையும் செய்துள்ளது
இந்த நிலையில் இதே நிறுவனம் ஜிவி பிரகாஷ் நடித்த 'ஐங்கரன் என்ற திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் பெற்றுள்ளது. இந்த படத்தை 'அடுத்த சாட்டை' ரிலீஸ் ஆகும் அதே செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறது. தமிழக சினிமா வரலாற்றில் ஒரு நிறுவனம் இரண்டு திரைப்படங்களில் உரிமையை பெற்று, இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்வது என்பது மிக அரிதாகவே நடக்கும் நிகழ்வாகும். அப்படி ஒரு நிகழ்வு தான் செப் 5ஆம் தேதி நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது