நடிகர் சங்கத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகை விஜயகுமாரி

Webdunia
செவ்வாய், 13 மார்ச் 2018 (20:33 IST)
நடிகை ராஜகுமாரி, நடிகர் சங்கத்துக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

 
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக பல்வேறு வழிகளில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்துப் போட்டிகள் நடத்தப்பட்டன.
 
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் கூட இரண்டரை கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். இந்நிலையில், நடிகை விஜயகுமாரியும் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தியிடம் அதற்கான காசோலையை அவர் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்