இரண்டாவது இன்னிங்சிற்கு ட்ரை பண்றீங்களா? உடல் எடை குறைத்து கிளாமரா இறங்கிய சினேகா!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (14:45 IST)
தென்னிந்திய சினிமாவின் சிரிப்பழகி சினேகா கடந்த 2001 ம் ஆண்டு வெளியான "என்னவளே" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். வசீகரா, ஆட்டோ கிராப் , பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில் , உன்னை நினைத்து , ஹரிதாஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக பேசப்பட்டார்.
இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2015ல் இவர்களுக்கு பிரசன்னா விஹான் என்ற மகன் பிறந்தார். பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை குழந்தை பிறந்தது.
 
குழந்தை பிறப்பு பிறகு படு குண்டாக இருந்த ஸ்னேகா கடும் முயற்சிக்கு பின்னர் இடைவிடாது உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துவிட்டார். சமீப நாட்களாக ஸ்லிம்மான உடலை வைத்து மாடர்ன் உடைகளை அணிந்து வரும் ஸ்னேகா தற்போது உரை போன்ற உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். சினிமாவில் இரண்டாவது ரவுண்ட் வர பிளான் போட்டுட்டாங்க போல... 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்