நடிகை ஸ்ரேயாவுக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (16:26 IST)
தென்னிந்திய திரையுலகில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகை ஸ்ரேயா. 2003 ஆம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நடிகை ஸ்ரேயா நடிப்பதே தன் மனத்துக்கு நெருக்காமானது என்று தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவை எந்த தொழிலோடும் ஒப்பிட முடியாது. நான் 17 வயது முதல் நடித்து வருகிறேன்.

 
தற்போது ஸ்ரேயா ‘வீர வசந்தராயலு’ எனும் தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ரேயாவின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர் அப்படக்குழுவினர். ஸ்ரேயா இப்படத்தில் ஏர் ஹோஸ்டஸாக நடித்துள்ளார். இதில் அவரது ஸ்டைல் மிக அழகாக உள்ளதாக டோலிவுட் பாராட்டி வருகிறது.
 
தமிழில் தற்போது அரவிந்த சாமி ஹீரோவாக நடிக்கும் ‘நரகாசூரன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு கன்னடப்  படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்