சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அதை திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்துறையினர் பிடித்தனர். காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சினிமா பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண் மணியனின் கார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும், காரை அதிவேகமாக ஓட்டியதற்கு ரூ.1200 அபராதம் விதிக்கப்பட்டது.