சம்பளப் பிரச்சனையால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கழட்டிவிடப்பட்ட பெண் !

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (16:47 IST)
விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் நான்கில் இருந்து ஷில்பா மஞ்சுநாத்தை நிர்வாகம் கழட்டிவிட்டுள்ளது.

இஸ்பேர் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவருக்கு அதன்பின் பெரிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.

அதைக் கணக்குப் பண்ணி அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இழுத்துப் போட பார்த்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால் விஜய் டிவியிடம் ஒரு கோடி கேட்டு அதிர்ச்சியடைய செய்துள்ளார் ஷில்பா மஞ்சுநாத். இதனால் அவரை கழட்டிவிட்டு வேறு ஒரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்