ரசிகருக்கு ‘பளார்’ அறை குடுத்த நடிகை! – சர்ச்சை வீடியோ குறித்து விளக்கம்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (11:34 IST)
கேரளாவில் பட ப்ரொமோஷனுக்காக ஷாப்பிங் மால் சென்ற நடிகை ரசிகரை அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படம் “சாட்டர்டே நைட்ஸ் (Saturday Nights)”. இந்த படத்தில் அஜூ வர்கீஸ், சய்ஜு குருப், சானியா அய்யப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அக்டோபர் 7ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி நேற்று கோழிக்கோடு ஹைலைட் மாலில் நடைபெற்றது. அங்கு ரசிகர்கள் நிறைய பேர் குவிந்திருந்தனர்.

ALSO READ: ட்ரெஸ் போடாம ஒன்னும் வரல.. போட்டிருந்தேன்..! – நடிகை பாவனா விளக்கம்!

ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்காக வந்த சானியா அய்யப்பனை பாதுகாவலர்கள் அழைத்து சென்றபோது ரசிகர் ஒருவரை சானியா எகிறி சென்று அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கமளித்து பதிவிட்டுள்ள சானியா அய்யப்பன், தன்னோடு வந்த சக பெண் ஒருவருக்கு அந்த நபர் தொட்டு தொல்லை செய்ததாகவும், அதனால் அவரை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதேசமயம் நேற்று நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்