ரம்யா பாண்டியனின் அப்பாவும் ஒரு சினிமா காரர்தான்! அட இது இவ்வளவு நாளா தெரியலயே!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (15:32 IST)
பிக்பாஸ் வீட்டுக்கு சென்றதின் மூலம் பிரபலமாகி நடிகை ரம்யா பாண்டியனின் தந்தை துரை பாண்டியன் ஒரு இயக்குனராம்.

ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். அதில் ரசிகர்கள் கிறங்கி போக பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.

இதையடுத்து அவர் இப்போது பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் நடிகர் அருண் பாண்டியன் அண்ணன் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரின் தந்தையான துரைபாண்டியனும் ஒரு சினிமாக் காரர்தானாம். நடிகர் அருண் பாண்டியன் நடித்த ஊழியன் என்ற படத்தை இயக்கியவர்  துரை பாண்டியன்தானாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்