புதிய ஹேர் ஸ்டைலில் ஓவியா - வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (18:02 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியா புதிய ஹேர் ஸ்டைலில் உள்ள ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.


 

 
தன்னுடைய காதலை ஆரவ் ஏற்காததால், மனமுடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் ஓவியா வெளியேறினார். அதன்பின் ஓரிரு நாள் சென்னையில் இருந்தார் ஓவியா. அதன் பின் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. 
 
சென்னையிலிருந்து விமானம் மூலம் கேரளா சென்ற அவர், தனது தந்தையிடம் கூறிவிட்டு, தனது நெருங்கிய தோழியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. 
 
இந்நிலையில்,  ஓவியாவுடன் ஒரு ரசிகர் சமீபத்தில் எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, தன்னுடையை நீண்ட முடியை வெட்டி, ஒரு ஆண் போல் அவர் தனது முடி அழகை மாற்றியுள்ளார் எனத் தெரிகிறது. வழக்கமாக, ஹாலிவுட் படங்களில் சில பெண்கள் இந்த முடி அலங்காரத்தை செய்திருப்பார்கள்.  தற்போது அந்த ஸ்டைலுக்கு ஓவியா மாறியுள்ளார் போலும்....

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்