இன்றைய பிக் பாஸ் டாஸ்கில் ஒரே குடும்பமாக எல்லோரும் இருக்கவேண்டும் என்றும், ஒவ்வொருவருக்கும் உறவு முறைகளை அவர்களே தேர்ந்தெடுக்க வைத்து, டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பிக் பாஸ் ஒரு வைரக்கல்லை கொடுத்து அதை பாதுகாக்கவேண்டும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த வைரக்கல்லை பிக் பாஸ் வீட்டில் உள்ள ஒருவரே அல்லது வெளியில் இருந்து யாரேனும் வந்து அதை திருடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.