காமெடி நடிகர்களுக்கு முத்தம் கொடுத்த பிக்பாஸ் ஓவியா (வைரலாகும் வீடியோ காட்சி)

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (08:33 IST)
தனியார் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா காமெடி நடிகர்களுக்கு முத்தமிட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல தொகைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. இவர்  தன்னுடைய குணத்தாலும் மற்றும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது உற்சாகமாகவும், நடனமாடியும் சிரித்தபடி இருப்பது மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்  ஓவியா.
 
இந்நிலையில் தனியார் நிறுவனம் நடத்திய சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஓவியாவிடம் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான ரோபோ சங்கர் மற்றும் சதீஷ் முத்தம் கேட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் சிரித்த முகத்துடன் ஓவியா முத்தமளித்திருக்கிறார். அவர் முத்தமளித்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்