திருமணத்திற்கு தயாரான நடிகை நமீதா - வைராலாகும் புகைப்படங்கள்

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (12:26 IST)
நமீதாவின் நெருங்கிய தோழியுமான ரைசா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் நமீதாவே தான் வீரா என்பவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
குஜராத்தில் பிறந்த நடிகை நமிதா, சொந்தம் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும், எங்கள் அண்ணா படத்தின் மூலம்  தமிழ் திரையிலும் அறிமுகமானார். பல்வேறு படங்களில் நடித்த நமீதா, தன் ரசிகர்களைப் பார்த்து ‘மச்சான்ஸ்’ என அழைத்து பிரபலமானவர். அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், தமிழில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து  கொண்டார்.
இந்நிலையில் அவரின் திருமணம் செய்தி வெளியானது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ள நமிதா நாளை திருமண பந்தத்தில் இணைய உள்ளார். திருமணத்திற்காக நமிதா தயாராகி வரும், புகைப்படங்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்