கொலைமிரட்டல்.... நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (23:00 IST)
நடிகை மீரா மிதுன் நேற்று கேரளாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சற்றுமுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 27ஆம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் திடீரென மீராமிதுன் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில் நேற்று கேரளாவில் உள்ள ஆலப்புழா என்ற இடத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மீராமிதுன் தங்கியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மீராமிதுனை வரும் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 இதனை அடுத்து  கடந்த ஆண்டு எம்.கே.பி நகர் போலீஸார் பதிவு செய்த கொலை மிரட்டல் வழக்கில் இன்று மீராமிதுனை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்