கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் - ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு...

Webdunia
திங்கள், 8 மே 2017 (17:02 IST)
பாகுபலி படத்தில் கட்டப்பா வேடத்தில் நடித்த நடிகர் சத்யராஜை, நடிகை குஷ்பு பாராட்டி தள்ளியுள்ளார்.


 

 
நடிகர் சத்யராஜ், பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரமான கட்டப்பா வேடத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். படத்தின் பல முக்கிய திருப்பங்களுக்கு இவர்தான் காரணமாக இருக்கிறார். 
 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு “ பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள கட்டப்பா வேடத்தில், சத்யராஜை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. மற்றொரு ரகசியம். நான் அவருக்கு ஜோடியாகத்தான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரையில்