பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர், அரசிலில் திமுகவில் இருந்து விலகி, காங்கிரஸ் நீண்ட காலம் செயல்பட்டு வந்த நிலையில், பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வரும் குஷ்பு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகை குஷ்பு தன் சமூக வலைதள பக்கத்தில், இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிப்பட்டுள்ளதாகவும், விரைவில் முழுமையாக குணமாகும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
On the road to recovery! Underwent a procedure for my coccyx bone ( tail bone ) yet again. Hope it heals completely.