இந்த நிலையில், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில், குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி முலம் அனுப்படவுள்ளதாகவும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1 செலுத்தி நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா என்பது சோதிக்கப்படவுள்ளது. மேலும், இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தகவலும் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியானது.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் 18 ஆம் தேதி முதல் அனுப்பப்படும். ஏற்கப்படாத விண்ணப்ப தார்கள் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் எனவும், மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.