”உங்கள கல்யாணம் பண்ணிக்கனும் மேடம்” – வெறித்தனமான ரசிகருக்கு குஷ்பூ அளித்த பதில்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (09:12 IST)
சமீபத்தில் நடிகை குஷ்பூ தனது ஸ்லிம் போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் ப்ரபோஸ் செய்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸில் இருந்த குஷ்பூ தற்போது பாஜகவில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார். அரசியல் பணிகளுக்கு நடுவேயும் சினிமா, டிவி ஷோக்கள் போன்றவற்றிலும் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் உடல் எடையை வெகுவாக குறைத்த குஷ்பூ தனது ஸ்லிம் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

அதில் கமெண்டில் பதிவிட்ட குஷ்பூ ரசிகர் ஒருவர் “நான் உங்களை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்து குஷ்பூ “மன்னிக்கவும்.. நீங்கள் 21 ஆண்டுகள் தாமதமாக வந்து விட்டீர்கள். ஆனாலும் இதுகுறித்து என் கணவரிடம் நான் கேட்கிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்