மீண்டும் திரையரங்குகள்: தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்!

ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (18:40 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 50 சதவீத பார்வையாளர்களுடன் தினசரி 3 காட்சிகள் மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இரவுக்காட்சி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் நாளை முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து திரையரங்குகள் சுத்தப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் திரையரங்குகளை சானிடைஸ் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாளை திரையரங்குகளில் திறக்கப்பட உள்ளதால் புதிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என்பதும் அதுமட்டுமின்றி திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்