ஓவியாவிற்கு கவுரவத்தை தேடித்தந்த கமலுக்கு நன்றி - நடிகை ஸ்ரீப்ரியா

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (15:39 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வாயாலேயே உண்மையை வரவழைத்த நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ரீப்ரியா நன்றி தெரிவித்துள்ளார்.


 

 
ஆரவ் தன்னுடைய காதலை ஏற்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.  இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஆரவ்விடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஆமாம், ஓவியாவிற்கு முத்தம் கொடுத்தது உண்மை என ஆரவ்வை ஒப்புக்கொள்ள வைத்தார். மேலும், அந்த விவகாரத்தை பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்றவர்களிடமும் கூறுங்கள். ஏனெனில், அவர்கள் ஓவியாவை தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என கூறினார். அதேபோல, அனைவர் முன்னிலையிலும் அதை ஆரவ் ஓப்புக்கொண்டார். 
 
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும், தொடர்ந்து ஓவியாவிற்கு ஆதரவாகவும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வந்த நடிகை ஸ்ரீப்ரியா இட்ட புதிய டிவிட்டில் “ அவள் நட்பை காதல் என்று தவறாக புரிந்து கொண்டாள் என கூறிய வாயால் அவள் கொடுத்ததை திருப்பி கொடுத்தேன் என்று ஒப்புக்கொள்ள வைத்து அப்பெண்ணுக்கு கவுரவத்தை (diginity) பெற்று தந்தது பெருங்குணம்.. பெண்ணாக என் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்