பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறியதையடுத்து தனது விசாரணையை ஆரம்பித்தார் கமல். இது நேற்று ஒளிபரபரப்பு செய்யப்பட்டது. இது ஆரவிடம் கமல் நடத்திய விசாரணை பலருக்கும் அதிர்ச்சியளித்தது.
ஓவியா, ஆரவ் இடையேயான காதல் விவகாரத்தில் மன அழுத்தத்தில் வெளியேறினார் ஓவியா. ஆனால் இந்த மன அழுத்தத்திற்கு ஆரவ் மட்டுமே கரணியாக இருக்க முடியாது. அவரும் ஒரு காரணி. பிக் பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இதற்கு பொறுப்பு. பலரும் தங்கள் குற்ற உணர்ச்சியால் அழுது தங்கள் தவறை உணர்ந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் சிலர் இன்னமும் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆரவிடம் கமல் விசாரணை நடத்தியபோது, ஓவியா ஏதோ தான் கொடுத்ததை திருப்பி கேட்டார் உங்களிடம், அந்த பண்டம் என்ன என கேட்டார். அதற்கு பதில் அளித்த ஆரவ் அவர் முத்தம் கொடுத்தார் அதை தான் திருப்பி கேட்டார். நீங்கள் அதை திருப்பி கொடுக்கவில்லையா என கமல் கேட்க இல்லை என கூறினார் ஆரவ்.
இதனையடுத்து பல விஷயங்கள் குறித்து விசாரணை நடத்திய கமல் மீண்டும் ஆரவிடம் முத்தம் குறித்து கேட்டார். ஓவியா திரும்பி போகும் வரை நீங்கள் அவருக்கு அவர் கொடுத்த முத்தத்தை திருப்பி கொடுக்கவில்லையா என கேட்டார். ஆனால் இப்பொழுத்து ஆரவால் அந்த கேள்வியில் இருந்து நழுவ முடியாமல் முத்தம் கொடுத்தேன் என கூறி உண்மைய ஒத்துக்கொண்டார்.
ஆனால் அந்த முத்தம் சினேகன் கேட்டுக்கொண்டதால் ஓவியாவை மாற்றுவதற்காக மருத்துவ ரீதியாக கொடுக்கப்பட்ட மருத்துவ முத்தம் என்ற புதிய ஒரு முத்தம் வகையை கண்டுபிடித்து கமலுக்கே அறிமுகப்படுத்தி வைத்தார். இந்நிலையில் ஆரவ், ஓவியா முத்தம் கொடுத்த புகைப்படம் என ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.