நடிகை அசினுக்கு அழகிய பெண் குழந்தை....

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (09:36 IST)
திருமணமாகி சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகை அசினுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.


 

 
நடிகை அசின் கடந்த வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் ஷர்மாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அவர் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார்.
 
அந்நிலையில், அவர் கர்ப்பமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது.
 
“தேவதைப் போல் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். கடந்த 9 மாதங்கள் எங்கள் இருவருக்கும் மறக்க முடியாத தருணங்கள்” என ராகுல் ஷர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
அதேபோல், எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அவள் என்னிடம் கேட்கும் சிறந்த பிறந்தநாள் பரிசு இதுதான்” என அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்