வில்லனாக நடிக்க இருந்த விவேக்… ஹீரோ இவர்தானாம்! நிறைவேறாத கடைசி ஆசை!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:37 IST)
நடிகர் விவேக் சில மாதங்களாக ஒரு படத்தை இயக்கும் முடிவில் இருந்ததாக செய்திகள் சொல்லப்பட்டு வருகின்றன.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரின் கடைசி ஆசை பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க இருந்த நிலையில் அந்த படத்தில் தானே வில்லனாக நடிக்கவும் ஆசைப்பட்டாராம். அதே போல நடிகர் மாதவன் மற்றும் இந்துஜா ஆகியோரை முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்