எங்க ஊர்ல மட்டும் விரட்டி விடுவோமா? - முதல் எபிசோடிலேயே செமையா ஸ்கோர் செய்த விஜய் சேதுபதி!

Prasanth Karthick
திங்கள், 7 அக்டோபர் 2024 (13:20 IST)

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்கிய நிலையில் முதல் எபிசோடிலேயே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

 

 

விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் கேம் ஷோ மக்களிடையே பிரபலமாக உள்ள நிலையில் அதன் 8வது சீசன் நேற்று தொடங்கியது. இதில் நடிகர் ரஞ்சித், விஜே ஆனந்தி, தயாரிப்பாளர் ரவிந்திரன் சந்திரசேகர், சஞ்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

 

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை நடிகர் கமல்ஹாசன் நடத்தி வந்த நிலையில், இந்த சீசன் முதலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கமல்ஹாசனுக்கு இணையாக விஜய் சேதுபதியால் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியுமா என்ற கேள்விகள் இருந்து வந்த நிலையில் முதல் நாளிலேயே அதற்கு பதில் அளிக்கும் விதமாக விஜய் சேதுபதியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

 

நடிகர் ரஞ்சித்தை விஜய் சேதுபதி அழைத்தபோது, ரஞ்சித்தின் நண்பர்களோடு சில வார்த்தைகள் பேசினார். அப்போது ரஞ்சித்தின் நண்பர் ஒருவர் விஜய் சேதுபதியிடம் ‘சாப்பிட்டீங்களா?’ என கேட்டுவிட்டு ‘எங்கள் ஊரில் முதல்ல சாப்பிட்டீங்களா? என்றுதான் கேப்போம்’ என்றார்.
 

ALSO READ: 100 ரூபாயை தாண்டிய தக்காளி விலை.. இன்னும் உயரும் என தகவல்..!
 

அதற்கு விஜய் சேதுபதி “எல்லா ஊரிலுமே ஒருவரை பார்த்தால் சாப்பிட்டீங்களா என்று கேட்பதுதான் சார் இயல்பு. நம் பழக்கம். எங்க ஊருக்கெல்லாம் வந்தா வெளியே போ என விரட்டியா விடுவோம்” என கிண்டலாக கேள்வி கேட்டு பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார். மேலும் சமீபத்தில் ரஞ்சித் நடித்து, இயக்கிய கவுண்டம்பாளையம் குறித்து மேடையிலேயே வெளிப்படையாக தனது அதிருப்தியையும் பதிவு செய்தார். விஜய் சேதுபதியின் இந்த நறுக் கேள்விகள் இந்த சீசனை பரபரப்பானதாக மாற்றும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்